close
Choose your channels

லோகேஷ் யுனிவர்ஸில் இணைய விரும்புகிறேன்: ஒரே நாளில் 'கைதி' 'விக்ரம்' பார்த்த பிரபலம் அறிவிப்பு!

Wednesday, September 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருக்கு ’லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்’ என்ற LCU பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள் என்பது தெரிந்ததே. லோகேஷ் தனது படங்களில் தனது முந்தைய படங்களின் காட்சிகளை இணைத்து கதையை உருவாக்குவதால் அவருக்கு இந்த பட்டத்தை ரசிகர்கள் வழங்கி உள்ளார்கள்

இந்த நிலையில் லோகேஷின் யுனிவர்ஸில் இணைய விருப்பம் தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே நாளில் பார்த்ததாக பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இவர் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய திரைப்படங்களை ஒரே நாளில் பார்த்து இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு பாராட்டு தெரிவித்துள்ள அனுராக் காஷ்யப் லோகேஷின் யுனிவர்ஸில் நானும் இணைய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தில் அனுராக் காஷ்யப்பை பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.