close
Choose your channels

விஷாலின் 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்தப் படம் வசூல் அளவிலும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் ’துப்பறிவாளன் 2’ படத்திற்கான லொகேஷனை பார்த்தார் என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானிக்கு விஷாலின் தந்தை இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ள இளையராஜாவுக்கு அட்வான்ஸ் பணத்தை கொடுக்கும் புகைப்பட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இந்த படத்தில் இணைந்ததை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் சீட் நுனியில் ரசிகர்கள் உட்கார்ந்து பார்க்கும் வகையில் த்ரில்லாக இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.