close
Choose your channels

தனுஷின் 'மாரி 2' படத்தில் இசைஞானி இளையராஜா

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் 'மாரி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. தனுஷூடன் சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு ஸ்பெஷல் பாடலை இந்த படத்திற்காக அவரது மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடியுள்ளார். இதுகுறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, 'இன்று மாரி 2' படத்திற்காக இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடியது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவொரு தெய்வீக அனுபவமாக இருந்தது. இந்த பாடலை பாடிய இசைஞானி அவர்களால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்ந்தோம்' என்று தனுஷ் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.