close
Choose your channels

விருதை விட இந்த வார்த்தைகள் பெரியது.. ஜேம்ஸ் கேமரூன் பாராட்டால் நெகிழ்ந்த ராஜமெளலி : வைரல் வீடியோ

Saturday, January 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலியை நேரில் சந்தித்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் ’விருதை விட உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது’ என நெகிழ்ச்சி அடைந்து கூறியுள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை பெற்ற இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி அவர்களுக்கு கோல்டன் குளோப் விருது சமீபத்தில் கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’டெர்மினேட்டர்’ ’டைட்டானிக்’ ’அவதார்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கேம்ஸ் கேமரூன் சமீபத்தில் எஸ்எஸ் ராஜமெளலியை சந்தித்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ’டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது அனைத்து படங்களும் பிடிக்கும் என ராஜமௌலி கூற அதற்கு, ‘நீங்கள் உங்களது படங்களின் கதாபாத்திரங்களை சரியாக வடிவமைத்து இருக்கிறீர்கள், அந்த கதாபாத்திரங்கள் உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது, குறிப்பாக நீர் நெருப்பு என நீங்கள் படத்தின் கேரக்டர்களை செட்டப் செய்துள்ளீர்கள் என்றும் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டினார்.

மேலும், ‘ஹீரோ என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் ரிவில் செய்கிறீர்கள் என்றும் உங்கள் படத்தின் மியூசிக் அனைத்துமே சூப்பராக இருந்தது என்றும் தெரிவித்தார். இதனை கேட்ட ராஜமெளலி, ‘விருதுகளை விட உங்களுடைய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது’ என கூறினார்.

மேலும் ’இந்த படத்தை தான் இரண்டு முறை பார்த்ததாகவும், இந்த படத்தை எடுக்க உங்களுக்கு எவ்வளவு நாள் ஆனது என்று கேமரூன் கேட்க, அதற்கு ராஜமெளலி, ‘320 நாட்கள் ஆனது’ என கூற, உடனே ஜேம்ஸ், ‘உலகத்திலேயே நீங்கள் தான் டாப்’ என புகழாரம் சூட்டினார். மேலும், ‘இங்கே ஹாலிவுட் படம் எடுக்க வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்றும் ஜேம்ஸ் கேமரூன் கூறியது அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.