close
Choose your channels

இன்ஸ்டாவில் நடிகை ஜான்வி கபூர் பகிர்ந்த முத்தம்… வைரலாகும் பதிவு!

Friday, April 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஜான்வி கபூரின் போட்டோஷுட் புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது kissie எனத் தலைப்பிட்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குநர் நித்தேஷ் திவாரியின் இயக்கத்தில் நடிகர் வருண் தாவனுடன் இணைந்து “பாவல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல நடிகர் ராஜ்குமார் ராவ்வுடன் இணைந்து “மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி” எனும் படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் ஜுனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படி தொடர்ந்து சினிமா, உடற்பயிற்சி என்று பிசியாக இருந்துவரும் நடிகை ஜான்வி சமூகவலைத் தளத்திலும் படு ஆக்டிவாகவே செயல்படுகிறார். அந்த வகையில் இவர் பதிவிடும் போட்டோஷுட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது kissie எனும் தலைப்பிட்டு கோல்டன் நிறத்திலான உடையணிந்து போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

நடிகை ஜான்வி சமீபத்தில் தனது தங்கை குஷி கபூர் மற்றும் நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஷிகரின் பிறந்தநாளை ஒட்டி இந்த தரிசனம் நடைபெற்ற நிலையில் ஜான்வியும் ஷிகர் பஹாரியும் காதலிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் சமூகவலைத் தளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் முத்தங்கள் எனும் தலைப்பில் போட்டோஷுட் புகைப்படம் வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.