close
Choose your channels

ஜான்வி கபூர் நடிக்கும் 2வது தென்னிந்திய திரைப்படம்.. ஹீரோ இவர் தான்..!

Tuesday, April 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜான்வி கபூர் ஏற்கனவே ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது திரைப்படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் ஜான்வி கபூர் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் புஜ்ஜி பாபு நடிக்கும் இந்த படம் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் முதல் முறையாக ஒரு கிராமத்து பெண் கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் ராம்சரண் தேஜா படத்திற்கு அவர் முதன்முதலாக இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.