close
Choose your channels

ஜெயம் ரவி - நயன்தாராவின் 'இறைவன்' ரிலீஸ் தேதி இதுதான்: படக்குழு அறிவிப்பு..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய ‘இறைவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ந்த வகையில் படக்குழுவினர் சற்றுமுன் ரிலீஸ் செய்தியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இறைவன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இறைவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.