close
Choose your channels

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் தேதி?

Monday, January 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டில் நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த படமான 'மிருதன்' தமிழில் வெளிவரும் முதல் 'ஜோம்பி' படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த புத்தாண்டில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் 'மிருதன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளிவரவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

ஜெயம் ரவி, லட்சுமிமேனன், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' பட இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில், வெங்கட்ராமன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.