close
Choose your channels

பொங்கலுக்கு உதயநிதி தரும் டபுள் ட்ரீட்

Monday, January 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மற்றொரு படமான 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பும் அதே பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உதயநிதி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

'ஜாலி எல்.எல்.பி' தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் ஏ.கே.அஹ்மத் இயக்கி வருகிறார்.

வரும் பொங்கல் தினத்தில் உதயநிதி கெத்து படத்தை ரிலீஸ் செய்வதோடு தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக்கை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.