close
Choose your channels

எம்ஜிஆர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி

Thursday, September 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் திலகம் எம்ஜிஆரின் கனவு திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தை அனிமேஷனில் தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

இந்த படத்தை தயாரிப்பது குறித்து தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, "ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் என் உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன். அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும். இயக்குனர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவிவை விட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதை விட, படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சென்னையில் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறோம்" என்று கூறினார்.

இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.