close
Choose your channels

அடுத்தடுத்து ரிலீஸாகும் ஜெயம் ரவியின் படங்கள்

Sunday, July 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரவி, ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதே உற்சாகத்துடன் ஜெயம் ரவியின் அடுத்த படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் தனி ஒருவன்' மற்றும் 'அப்பாடக்கர்' ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. நேற்று ஜெயம் ரவி நடித்த அப்பாடக்கர் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ஜெயம் ரவி தனது சகோதரர் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நடித்து வரும் 'தனி ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'தில்லாலங்கடி' படத்திற்கு பின்னர் ஜெயம் சகோதரர்கள் இணையும் திரைப்படம்தான் 'தனி ஒருவன்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி, கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா, சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ராம்ஜியின் ஒளிப்பதிவில் வி.டி.விஜயனின் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா வசனம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடக்கர், தனி ஒருவன் ஆகிய இரு படங்களுமே அடுத்தடுத்து இவ்வருடத்திற்குள் ரிலீஸாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.