close
Choose your channels

அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'காலா' நடிகை

Tuesday, June 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், அதற்கான பணிகளில் இயக்குனர் சிவா உள்பட படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் புதியதாக சாக்சி அகர்வால் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. சாக்சி அகர்வால் கடந்த வாரம் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தில் அவரது மருமகள்களில் ஒருவராக நடித்தவர் என்பதும், இந்த படத்தில் அவருக்கு சிறிய கேரக்டர் என்றாலும் கவனிக்கத்தக்க கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, காலிராணி, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விசுவாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.