உலகின் மிகப்பெரிய ஐடி ஊழலின் கதை: காஜல் அகர்வாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, ஹிந்,தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஐடி துறையில் நடந்த ஊழல் குறித்த கதையில் நடிகை காஜல்அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ’அனு அண்ட் அர்ஜுன்’ என்ற டைட்டில் தமிழுக்கும், மொசகாலு’ என்ற டைட்டிலும் தெலுங்கு மொழிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜெப்ரி ஜி சின் என்பவர் இயக்கவுள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால் ஏற்கனவே ஹேய் சினாமிகா, ஆச்சார்யா, இந்தியன் 2, கோஸ்டி, பாரீஸ் பாரீஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.