close
Choose your channels

மோகன்லாலின் மெகா பட்ஜெட் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் கலைப்புலி எஸ். தாணு

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மெகா பட்ஜெட் திரைப்படத்தை தமிழில் கலைபுலி எஸ் தாணு அவர்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மரைக்கர்’. சரித்திர கதையம்சம் கொண்ட இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரிலீஸ் செய்ய உள்ளதாக சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ’வரலாற்று சிறப்புமிக்க மரைக்கார் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர் ,கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேணு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.