ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை கூறிய திரையுலகின் இருமேதைகள்
தமிழ் திரை உலகின் இரு மேதைகள் என்று கூறப்படும் கமலஹாசன் மற்றும் வைரமுத்து ஆகிய இருவரும் இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை அடுத்து இன்று ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அனைவரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம்’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் இது குறித்து கவியரசு வைரமுத்து கூறியதாவது:
கல்லூரிப் பேராசிரியர்கள்
எனக்கு உரமிட்டவர்கள்;
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.
காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்
பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.
அவர்களைப் பார்த்துப்
பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;
காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.
ஆசிரியர் குலத்திற்கு
என் கனிந்த கைகூப்பு.
நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2020
கல்லூரிப் பேராசிரியர்கள்
— வைரமுத்து (@Vairamuthu) September 5, 2020
எனக்கு உரமிட்டவர்கள்;
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.
காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்
பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.
அவர்களைப் பார்த்துப்
பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;
காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.
ஆசிரியர் குலத்திற்கு
என் கனிந்த கைகூப்பு.