close
Choose your channels

நடிகர் சங்கத்துடன் மீண்டும் இணையும் கமல்-ஸ்ருதி

Friday, April 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'தூங்காவனம்' படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தொடக்கவிழா ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்கத்தின் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

முதன்முதலாக மகள் ஸ்ருதிஹாசனுடன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்த படத்தின் தொடக்கவிழா வரும் 29ஆம் தேதி தனது குடும்பமான நடிகர் சங்கத்தின் மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதி அளித்த நடிகர் சங்கத்திற்கு நன்றி என்றும் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் 41வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி மற்றும் ரொமான்ஸ் அம்சங்களுடன் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ்குமார் இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.