close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பு!

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதாக கமலஹாசன் அறிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகி அல்லது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51-வது படமாகும் சிவகார்த்திகேயனின் 21வது படமாகவும் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.