close
Choose your channels

பிரபல ஹீரோவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய சமந்தா!

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹீரோவை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சமந்தாவின் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் நடிகை சமந்தா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தாவின் பிறந்தநாள் காஷ்மீரில் விஜய்தேவரகொண்டா மற்றும் படக்குழுவினருடன் கொண்டாடப்பட்டது என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் இன்று விஜய் தேவர்கொண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டமும் அதே படக்குழுவினர்களால் காஷ்மீரில் கொண்டாடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமந்தா விஜய் தேவரகொண்டாவை கட்டிப் பிடித்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கட்டும் என்றும், அனைத்து அன்புக்கும் பாராட்டுக்கும் நீங்கள் தகுதியானவர்கள் என்றும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்ப முடியாத அளவுக்கு அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்றும் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமந்தா பதிவு செய்த புகைப்படம் மற்றும் வாழ்த்து தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.