close
Choose your channels

ஆடியன்ஸ் கொடுத்த அவசர மெனு: தாளிப்பாரா கமல்?

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சுமார் 70 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் கடந்த சீசனில் பெற்ற வரவேற்பில் பாதி கூட இன்னும் பார்வையாளர்களிடம் இருந்து பெறவில்லை. போட்டியாளர்கள் மீது மட்டுமின்றி இந்த சீசனில் கமல் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றது

மும்தாஜ், பாலாஜி, செண்ட்ராயன் ஆகியோர் சிறு தவறு செய்தபோதிலும் அதை தட்டிக்கேட்கும் கமல், ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் மகத் செய்யும் பெரிய பெரிய தவறுகளை கூட கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமின்றி மூவருக்கும் அவ்வப்போது சலுகைகளும் கொடுத்து கடுப்பேற்றுகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக மகத், மும்தாஜூக்கு கொடுக்கும் டார்ச்சர் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்குக்ம் பெரும் எரிச்சலை தருகிறது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் கமலிடம் பார்வையாளர்கள் நேரடியாகவே தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மகத், ஐஸ்வர்யா, யாஷிகாவை கண்டியுங்கள் என்று கூறுகின்றனர். இதற்கு பதிலளித்த கமல், 'நான் ஏற்கனவே கண்டித்தேனே யாரும் கேட்க மாட்டேங்குறாங்க, இப்ப மெனு கொடுத்துட்டிங்க, இனிமே தாளிச்சிர வேண்டியதுதான் என்று ஆவேசமாக கூறுகின்றனர்.

கமலின் ஆவேசம் புரமோ வீடியோவில் இருந்தது போல் நிகழ்ச்சியிலும் இருக்குமா? அல்லது வழக்கம்போல் ஆடியன்ஸ் கொடுத்த மெனு கஸ்டமர் டேபிளுக்கு போகாமல் பிளாக்ல வித்துடுவாரான்னும் பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.