close
Choose your channels

சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி வந்த 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். வெற்றி, சர்வேஷ் முராரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.