close
Choose your channels

ஒரு அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்: 'தம்பி' டிரைலர்

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, ஜோதிகா முதல் முதலாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ’தம்பி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் இருந்து இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட் படம் என்று தெரிகிறது

18 வருடங்களுக்கு முன் காணாமல் போன கார்த்தி, திடீரென வீட்டிற்கு வந்தவுடன் அவரை ஒரு சிலர் ஏற்றுக் கொள்வதும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதும் அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது

ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளிலும், அக்காவிடம் ஒரு தம்பி காட்டும் பாசத்தையும் நடிகர் கார்த்தி வழக்கம்போல் புகுந்து விளையாடும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது

அதேபோல் ஆவேசம் மற்றும் பாசம் ஆகிய கட்சிகளுடன் ஜோதிகாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. சத்யராஜ் வழக்கம்போல் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதை டிரைலரில் காணமுடிகிறது

அதிரடி ஆக்ஷன் மட்டும் சஸ்பென்ஸ் உடன் கூடிய கதையை இயக்குவதில் ஜித்துஜோசப் வல்லவர் என்பதால் இந்த படத்தையும் அவர் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் இயக்கி இருப்பார் என்றே இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது

மேலும் கோவிந்து வசந்தாவின் பின்னணி இசை அசர வைக்கும் அளவுக்கு உள்ளது ராஜசேகரின் அபார ஒளிப்பதிவு விநாயக் அற்புதமான படத்தொகுப்பு இந்த படத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. மொத்தத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கத்தில் இன்னுமொரு ‘பாபநாசம்’ படத்தை காண ரசிகர்கள் தயாராகலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.