close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தின் டைட்டில்-பர்ஸ்லுக் ரிலீஸ்!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தயாரிப்பாளர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் என்பவர் இயக்கிய திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’பபூன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் என்பவர் ஒளிப்பதிவும், குமார் தங்கப்பன் என்பவர் கலை இயக்கமும், வெற்றி கிருஷ்ணன் என்பவர் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்து வரும் ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.