close
Choose your channels

'முந்தானை முடிச்சு' ரீமேக்: பாக்யராஜூடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ

Wednesday, May 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த ’முந்தானை முடிச்சு’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முருங்கைக்காய் வசனம் 37 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை புகழ் பெற்று நிற்பது பாக்கியராஜின் வெற்றிக்கு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 37 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரீமேக்கை கே.பாக்யராஜ் உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ’முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்தில் பாக்கியராஜ் உடன் பிரபல ஹீரோ சசிகுமார் இணைய உள்ளதாகவும், இந்த படத்தை ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த படம் குறித்த விரிவான தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 37 ஆண்டுகள் கழித்து பாக்யராஜின் சூப்பர்ஹிட் படம் ஒன்று ரீமேக் ஆகவிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.