close
Choose your channels

கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் சென்சார், ரன்னிங் டைம் தகவல்கள்: மார்ச் 30ல் ரிலீஸ்..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிய ’தசரா’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் மார்ச் 30ஆம் தேதி தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’தசரா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் இந்த படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் அதாவது 156 நிமிடங்கள் ரன்னிங் டைமாக கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய இந்த படம் 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளதாகவும் சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், சாய்குமார் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.