close
Choose your channels

'கேஜிஎப் 3' படத்தில் கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா சகோதரர்கள்? வைரல் புகைப்படம்

Friday, December 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்' மற்றும் ’கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் விரைவில் ’கேஜிஎப் 3’ படம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் ’கேஜிஎப்' யாஷ் உடன் இணைந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து இவர்கள் இருவரும் ‘’கேஜிஎப் 3’ படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’கேஜிஎப்மற்றும் ’கேஜிஎப் 2 இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட் ஆகியது என்பதும் குறிப்பாக ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேஜிஎப் நடிகர் யாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் இணைந்து புகைப்படத்தை பதிவு செய்து ’கேஜிஎப் 3’ எனவும் பதிவு செய்துள்ளார்.இதனை அடுத்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் ’கேஜிஎப் 3’ படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இர்பான் பதான் சமீபத்தில் வெளியான ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் வேறு சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடித்துள்ள நிலையில் ஹர்திக் மற்றும் க்ருணால் ஆகிய இருவரும் ’கேஜிஎப் 3’ படத்தில் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.