close
Choose your channels

சின்னகலைவாணர் மறைவு: த்ரிஷா, ப்ரியா பவானிசங்கர் உள்பட நேரில் அஞ்சலி செய்த பிரபலங்கள்

Saturday, April 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருடைய உடல் அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உள்பட பலரும் தற்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த கோவிட் பரவல் நிலையிலும் நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் வந்து தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகை த்ரிஷா, நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் விக்ரம், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் நாசர், நடிகர் சூரி, நடிகர் கார்த்தி, இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சரத்குமார், நடிகர் சந்தானம், நடிகர் யோகிபாபு, நடிகை ஆர்த்தி, நடிகை இந்துஜா, உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.