close
Choose your channels

உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல்ல: 'ஐரா' டீசர் விமர்சனம்

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஐரா' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மறுபடியும் பெண் குழந்தையா? என்ற ஏக்கமான வசனத்துடன் தொடங்கும் டீசரில் நயன்தாராவின் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் இருந்து அவர் இரட்டை வேடம் உறுதியாகியுள்ளது.

'என் தலையெழுத்தை யாருன்னே தெரியாத ஆறு பேர் கிறுக்கி எழுதியிருகாங்க' என்ற வசனத்தில் இருந்து இரட்டையாக பிறந்த குழந்தைகளில் ஒன்று கிராமத்திலும் இன்னொன்று நகர பின்னணியிலும் வளர்ந்து வருவதும் இருவரில் ஒருவருக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இன்னொருவர் பழிவாங்குவதுதான் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான நகர நயன்தாராவும் இதுவரை திரையில் பார்த்திராத கிராமத்து நயன்தாரா லுக்கும் இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று

சுந்தர மூர்த்தியின் பின்னணி இசையில் இருந்தே இதுவொரு திகில் படம் என்பது உறுதியாகியுள்ளது. சர்ஜூன் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.