close
Choose your channels

'லியோ' படத்தின் 'நான் ரெடி' பாடலை விஜய்யுடன் பாடியது இந்த பிக்பாஸ் பிரபலமா? 

Tuesday, June 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ என்ற பாடல் அவரது பிறந்த நாளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாடல் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை 2000 நடன கலைஞர்களுடன் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலில் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேலாக ஒரே ஷாட்டில் உருவான காட்சி உள்ளது என்றும் அதில் விஜய் நடனத்தில் அசத்தியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த பாடலை விஜய்யுடன் சேர்த்து பிக் பாஸ் பிரபலம் அசல் கோலார் பாடியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பல தனி பாடல்கள் மற்றும் சில திரைப்பட பாடல்களை அசல் கோலார் பாடியுள்ள நிலையில் முதல் முறையாக அவர் தளபதி விஜய் உடன் இணைந்து பாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.