close
Choose your channels

நீங்களுமா லோகேஷ் கனகராஜ்? ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பும் விஜய் ரசிகர்கள்!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள், ‘நீங்களுமா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ’வலிமை’ படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டனர் என்பதும் கிரிக்கெட் வீரர்கள் முதல் முதலமைச்சர் வரை அவர்கள் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ‘பீஸ்ட்’ படத்தின் இந்த அப்டேட் வராத நிலையில் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை பின்பற்றி கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரிடம் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தெரிவித்தார்., அந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என கேட்டிருக்கிறார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ‘நீங்களுமா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.