close
Choose your channels

'விக்ரம்' படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்: இணையத்தில் வைரல்

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் கமலஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் கடைசி காட்சியில் பகத் பாசில் துப்பாக்கியால் சுடும் காட்சியின் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் சந்தோஷத்தை வெளிப்படுத்திய காட்சியையும் அவர் அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 110 நாட்கள் நடைபெற்றதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.