close
Choose your channels

மாரி-2 நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்த நடிகை: வைரலாகும் வீடியோ

Thursday, February 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சமீபத்தில் இணைந்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய் நடித்து வரும் மலையாள திரைப்படமான அபி&அனு என்ற படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் டொவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயின் லிப்கிஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

மலையாளத்தில் ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த டொவினோ தாமஸ்தான், தனுஷின் 'மாரி 2' படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ் உள்பட பலர் நடித்து வரும் 'மாரி 2' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.