close
Choose your channels

இன்று முதல் 'மாவீரன் கிட்டு'வுக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

Thursday, December 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், ஸ்ரீதிவ்யா நடித்த 'மாவீரன் கிட்டு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பொதுவாக பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்திருந்த போதிலும் படத்தின் இரண்டாம் பாதியின் திரைக்கதை திசைமாறி போனதாக நமது விமர்சனம் உள்பட பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் பாதியில் சில மாற்றங்களை படக்குழுவினர் செய்துள்ளனர். படத்தின் ஒருசில காட்சிகளை நீக்கியும், விஷ்ணுவின் சில காட்சிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த புதிய மாற்றத்துடன் கூடிய 'மாவீரன் கிட்டு' திரைப்படம் இன்று முதல் திரையில் திரையிடப்படுகிறது. இந்த மாற்றத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வசூலும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.