close
Choose your channels

அஜித்துடன் போட்டோவில் இருப்பவர் யார் தெரியுமா?

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணம் செய்யும் பைக்கை அவருக்கு கொடுத்து உதவுவது அங்கு பைக் வாடகை நிலையம் வைத்திருக்கும் Mark Coventry என்பவர் என தற்போது தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் பைக் வாடகை நிலையம் வைத்திருக்கும் இவர் தான் அஜித் ஒவ்வொரு நாட்டுக்கும் பைக் பயணம் செல்லும்போது அவர் விரும்பும் பைக்கை வாடகைக்கு கொடுத்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியது. மேலும் அஜித்துக்கு பைக் கொடுத்த Mark Coventry உடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் ஐரோப்பிய பைக் பயணத்தை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என்றும் அதன் பிறகு ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப் படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'ஏகே 62’ என்ற படத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது விக்னேஷ் சிவன் தொடங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.