close
Choose your channels

'விஸ்வாசம்' படத்தில் மாஸ் குத்து பாடல்: பாடலாசிரியர் விவேகா

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் டீசர், டிரைலர், சிங்கிள் பாடல், இசை வெளியீடு குறித்த எந்த அறிவிப்பும் படக்குழுவினர்களிடம் இருந்து இல்லாததால் அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேகா தந்த ஒரு பேட்டி அஜித் ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் மூன்று பாடல்களை தான் எழுதியுள்ளதாகவும், அதில் ஒன்று மாஸ் குத்துப்பாட்டு என்றும் பாடலாசிரியர் விவேக் கூறியுள்ளார்.

'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்ற 'அதாரு அதாரு' மற்றும் 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடல்களை தூக்கி சாப்பிடும் வகையில் இந்த குத்துப்பாட்டு இருக்கும் என்ற செய்தி வெளிவந்துள்ளதால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர். இதே உற்சாகம் நீடிக்கும் வகையில் விரைவில் சிங்கிள் பாடலாக இந்த குத்துப்பாட்டை படக்குழுவினர் வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.