அமெரிக்க ஓபன் டென்னிஸ்ஸில் மிரட்டிய வீரர்… அசுரத்தனமான ஆட்டத்தால் வெற்றி!


Send us your feedback to audioarticles@vaarta.com


அமெரிக்க ஓபன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் விளையாடிய ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ் தனது அரசுத்தனமான செர்வ்களால் பலமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச்சை திணறச் செய்துள்ளார். மேலும் 200 கி.மீ வேகத்தில் இவர் வீசிய செர்வ் மூமெண்ட் தற்போது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆக்கியிருக்கிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து ரஷ்ய வீரர் மெட்வதேவ் களம் இறங்கினார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மெட்வதேவ் இறுதிப்போட்டியில் 6-4,6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளார். பொதுவாக Unorthodox ப்ளேயர் என்று பெயர் எடுத்த மெட்வதேவ் இந்தப் போட்டியில் நேர்த்தி, தெளிவு மற்றும் வியூகம் வகுத்து பொறுமையாக விளையாடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
கூடவே தனது ஒவ்வொரு செர்வ் லேண்டிங்கும் 200 கி.மீ வேகத்தில் இருக்குமாறு அசுரத்தனமாக விளையாடினார். இதுகுறித்து பேசிய ஜோகோவிச், மெட்வதேவின் செர்வ்கள் ஒவ்வொன்றும் ஃப்ரி பாயிண்டை எளிதாக பெற்றுத் தந்துவிடும். இதனால் நமக்குத்தான் பிரஷர் கூடுகிறது எனத் தெரிவித்து உள்ளார்.
6.6 அடி உயரம் கொண்ட மெட்வதேவ் பற்றிப்பேசும் ரசிகர்கள் மிருகத்தனமாக விளையாடி எதிராளியை காலிசெய்துவிட்டார் என்றே கருத்துக் கூறிவருகின்றனர். இதனால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு முடிவுரை எழுதிய மெட்வதேவ் தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால் கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments