close
Choose your channels

மீண்டும் ஒரு காதல் கதை' சென்சார் தகவல்கள்

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தட்டத்தின் மறயாது' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. ஆனால் தற்போதுதான் இந்த படத்தை வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வால்டர் பிலிப்ஸ், இஷால் தல்வார், சங்கிலி முருகன், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.