close
Choose your channels

'கோட்' படத்தில் ஆக்சன் காட்சிகளா? பாக்ஸிங் பழகிய மீனாட்சி சவுத்ரி.. வைரல் புகைப்படங்கள்..!

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சினேகா, லைலா, பார்வதி மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மீனாட்சி சவுத்ரி குடும்பத்துடன் தாய்லாந்து சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவர் தாய்லாந்தில் பாக்ஸிங் பழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தாய்லாந்து சென்ற நாள் முதல் அந்நாட்டில் பிரபலமாக இருக்கும் பாக்ஸிங் கலையை பயின்று கொண்டேன். இந்த கலையால் என் மனது மிகவும் திருப்தி அடைந்தது. பாக்ஸிங் கற்றதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் அவர் பாக்ஸிங் கலைஞர் ஒருவருடன் மோதும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்களை பதிவு செய்து வரும் ரசிகர்கள் ’கோட்’ படத்தில் உங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறதா? அதனால் தான் தாய்லாந்து சென்று பாக்ஸிங் பழகுகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதில் மீனாட்சி சவுத்ரியிடம் இருந்து வராது என்றாலும் படம் பார்த்தால் தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.