close
Choose your channels

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மேகா ஆகாஷ் படங்கள் ரிலீஸ்

Monday, February 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ், இந்த படம் வெளிவரும் முன் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகி அந்த படங்களும் ரிலீசாக தொடங்கிவிட்டன. ஆனால் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் குறித்த தகவல் வெளிவரவில்லை

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரஜினியுடன் மேகா ஆகாஷ் நடித்த 'பேட்ட' திரைப்படம் ரிலீஸான நிலையில் இம்மாதம் 1ஆம் தேதி சிம்புவுடன் அவர் நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி மேகா ஆகாஅஷ் நடித்த இன்னொரு படமான 'பூமராங்' வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராதான் இசையில் பிரசன்னகுமார் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.