close
Choose your channels

சிம்பு-சுந்தர் சி படத்தில் இணையும் தனுஷ் நாயகி

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கவுள்ள படம் குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. இந்த படம் பவன்கல்யாண், சமந்தா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'Attarintiki Daredi படத்தின் தமிழ் ரீமேக் என்பது தெரிந்ததே. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் பவன்கல்யாண் வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில் சமந்தா வேடத்தில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வந்துள்ளது. அவர்தான் மேகா ஆகாஷ். மேகா ஆகாஷ் ஏற்கனவே தமிழில் தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிகிறது. சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் முடித்துவிட்டு வெங்கட்பிரபுவின் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.