close
Choose your channels

மெட் காலா 2021… கண்ணைப் பறிக்கும் உடைகளில் ஹாலிவுட் பிரபலங்கள்!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய அருங்காட்சியகத்தில் “மெட் காலா 2021“ நிகழ்ச்சி கடந்த திங்கள் கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி “அமெரிக்காவின் பேஷன் ஆஃப் லெக்ஸிகன்“ எனும் பெயரில் “அமெரிக்காவின் சுதந்திரம்“ என்கிற தீமை கொண்டு நடைபெற்றது.

இதனால் பாப் கலாச்சாரங்களின் வளர்ந்துவிட்ட தருணங்களையும் அதன் வரலாற்றுப் போக்குகளையும் காட்சிப்படுத்திய பிரபலங்கள் கொரோனா தொற்றுநோயின்போது அரசியல் ரீதியாக நடைபெற்ற விமர்சன ரீதியான கருத்துகளையும் தங்களின் ஆடைகளில் காட்சிப்படுத்தி இருந்தனர். கடந்த ஆண்டுகளை விட இந்த 2021 நிகழ்ச்சியில் அரசியல் அதிகம் பேசப்பட்டு, பாலினச் சமத்துவம் பற்றிய கருத்துகளையும் பிரபலங்கள் தங்களின் ஆடைகளில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதில் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபல மாடலான கெண்டல் ஜென்னர் கற்கள் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான ஆடையை அணிந்து இருந்தார்.

இன்னொரு பிரபல மாடலான கிம் கர்தாஷியன் எப்போதும் போல வித்தியாசமான உடையணிந்து மெட் காலாவையே அதிர விட்டிருந்தார். கறுப்பு நிற உடையணிந்த கிம் கர்தாஷியன் தன்னுடைய உடல் முழுவதையும் கறுப்பு உடையால் மூடிவிட்டு வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் காட்சிப்படுத்தி இருந்தார். இதனால் கிம் பேசிய அரசியல் மெட் காலா சிவப்பு கம்பளத்தில் பெரிதும் வரவேற்பு பெற்றது.

பிரபல பாப் பாடகியான ரெஹானே கருப்பு நிற உடையணிந்து சிகை அலங்காரத்துடன் வித்தியாசமாக காட்சி அளித்தார்.

மெட் காலா 2021 இல் உலகப்புகழ் பெற்ற பிரபல மாடலான ஜிஜி ஹேடி வெள்ளை நிற உடையணிந்து எலகெண்டான தோற்றத்துடன் காட்சி அளித்தார்.

23 வயதான டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா தனது காதலர் கோர்டேயுடன் முதல்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் லூயிஸ் உய்ட்டன் வடிவமைத்த உடையை அணிந்ததோடு வித்தியாசமான நீண்ட சிகை அலகங்காரத்தையும் செய்திருந்தார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மாடலும் நடிகையும் பாடகியுமான காரா டெலிவிங்னே(Cara delevingne) தனது பங்கிற்கு பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை நிற உடையில் மெட் காலா சிவப்பு கம்பளத்தை அலங்கரித்து இருந்தார்.

ராப் பாடகரான லிஸ் நாஸ் எக்ஸ் 3 அடுக்குகளால் ஆன உடையை அணிந்து மெட் காலா நிகழ்ச்சியை படு உற்சாகப்படுத்தி இருந்தார். முதலில் தங்க முத்திரைப் பதித்த ரிகல் கோல்டன் வெல்வெட் அங்கியை அணிந்து இருந்தார். அதற்குள் தங்க நிறத்திலான கவுன் அணிந்து இருந்ததோடு இறுதியாக தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட கறுப்பு நிறம் பொருந்திய அழகான ஆடையை அணிந்து இருந்தார். இது பார்ப்பதற்கு கண்ணைப் பறிக்கும் வகையில் அமைந்திருந்தது.

பிரபல பெண் கவிஞரும் சமூக ஆர்வலருமான அமெண்டா கோர்மன் தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக நீலநிற கவுனை அணிந்து மெட் காலா நிகழ்ச்சியில் வலம் வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.