அரசியலில் கமல் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை: தமிழக அமைச்சர்
உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னை உள்பட ஒருசில முக்கிய தொகுதிகளில் கௌரவமான வாக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் கட்சியை நல்ல முறையில் வளர்த்து வருகிறார் என்பதும் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட்டு மக்களின் நன்மதிப்பை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமலஹாசன் குறித்தும் அவரது அரசியல் குறித்தும் தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் அதற்கு கமலஹாசனும் பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ’நடிப்பில் கமல்ஹாசன் திரையுலக சக்கரவர்த்தி தான். ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இன்னும் அவர் எல்கேஜியில் கூட சேரவில்லை என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.