close
Choose your channels

'மிருதன்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Monday, January 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வருடம் ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன், தனி ஒருவன் மற்றும் பூலோகம் என நான்கு வெற்றி படங்களை கொடுத்து 2015ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் என்ற பெயர் பெற்ற ஜெயம் ரவி, இவ்வருடத்திலும் வெற்றி நாயகனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடித்த 'மிருதன்' படம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'மிருதன்' படத்திற்கு பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மூன்று பாடல்களும் இரண்டு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது என்று டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழின் முதல் ஜாம்பியா படம் என்பதால் இந்த படத்தின் பின்னணி இசையிலும் டி.இமான் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.