close
Choose your channels

தனுஷ் படத்தில் இணைந்த மலையால சூப்பர் ஸ்டார் மோகன்லால்!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தையும் கேரளாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் நாயகியான ரஜிஷா விஜயன் மற்றும் வில்லன் லால் ஆகிய இருவரும் மலையாளத்தில் பிரபலம் என்பதால் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசுரன் படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கிய போது கலைப்புலி தாணுவும் மோகன்லாலுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்தப் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை மோகன்லாலுக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.