close
Choose your channels

ரஜினியுடன் 2வது முறையாக இணைந்த மோகன்லால்

Saturday, July 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தினம் நெருங்க நெருங்க ரசிகர்களிடம் டென்ஷன் ஏறிக்கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பெற்றார். மோகன்லால் இந்த படத்தின் உரிமையை கேட்டபோது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மிகவும் ஆச்சரியமடைந்து அவருக்கு இந்த உரிமையை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள மோகன்லால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்துள்ளார். மேலும் தான் புதியதாக கட்டியுள்ள ஆஷிர்வாத் என்ற திரையரங்கின் திறப்பு விழாவை நேற்று நடத்திய மோகன்லால், அந்த திரையரங்கில் முதன்முதலாக 'கபாலி' படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மோகன்லால் 'ஒப்பம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் கண் தெரியாத கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்கும் த்ரில் படம் ஆகும். இந்த படத்தின் டிரைலரை வரும் 22ஆம் தேதி அதாவது 'கபாலி' ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் திரையிட மோகன்லால்-பிரியதர்ஷன் முடிவு செய்துள்ளனர். எனவே கேரளாவில் 'கபாலி' படத்தை பார்ப்பவர்களுக்கு கூடுதல் போனஸ் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 'கபாலி' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றது மட்டுமின்றி தன்னுடைய படத்தின் டிரைலரையும் அந்த படத்துடன் மோகன்லால் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.