close
Choose your channels

'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது?

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் வீடியோ ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அந்த வீடியோ வெளியாகும் நேரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ‘வலிமை’ திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறு வீடியோ அதாவது 15 முதல் 20 வினாடிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 6.03 மணிக்கு இந்த வீடியோ வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த வீடியோவுக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.