அவரை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி அடைந்தது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


Send us your feedback to audioarticles@vaarta.com


அவரைப் பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த ஆல்பம் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரபுதேவா, குஷ்பு, சுகாசினி, உள்பட பலரும் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸை சந்தித்த ஐஸ்வர்யா, தனது ஆல்பம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘லாரன்ஸ் அண்ணாவை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது' என்று தெரிவித்துள்ளார் இந்த பதிவும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.