close
Choose your channels

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக களமிறங்குகிறார் விஷால்

Friday, May 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக நாசர் தலைமையிலான இளைய தலைமுறை நிர்வாகிகள் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம். நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்வது, நடிகர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்வது, நாடக நடிகர்களுக்கு பல்வேறு உதவிகள் மற்றும் நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடத்திற்கான முயற்சிகள் ஆகியவற்றில் நடிகர் சங்கம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சங்கம் அடுத்ததாக முன்னாள் நடிகர் சங்கத்தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வருவதால் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட இப்பொழுது முதலே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.