close
Choose your channels

'தல 57' குறித்து அனிருத்தின் முக்கிய அறிவிப்பு

Friday, May 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வேதாளம்' வெற்றி படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 57' படத்தையும் 'வேதாளம்' இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பதையும், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று இன்று மாலை 05.07க்கு வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. தல'யின் 57வது படம் என்பதால் செண்டிமெண்ட்டாக 5.07க்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

வேதாளம்' படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பக்கபலமாக இருந்ததால் மீண்டும் அனிருத் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.