close
Choose your channels

சரத்குமார்-சசிகுமார் படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

Thursday, July 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது நடிகர் சரத்குமாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சசிகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'நாநா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கிய இயக்குனர் நிர்மல்குமார் இயக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இவரும் 'சலீம்' படத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.