close
Choose your channels

நயன்தாராவின் 'ஐரா' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Wednesday, February 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'ஐரா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கருப்பு நயன்தாராவின் கேரக்டர் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.